பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ”எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், 26 சுற்றுலா பயணியரை கொடூரமாக சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என, பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் மிக உயர்ந்த அமைப்பான, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் டில்லியில் இன்று நடக்கிறது.

கடந்த ஏழு நாட்களில் இந்த குழு இரண்டாவது முறையாக இன்று கூடுகிறது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு முதல் நாளான நேற்று, டில்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், பிரதமருடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், பிரதமர் மோடி பேசியதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பயங்கரவாதத்தை வேருடன் ஒழிப்பதில் நாடு உறுதியுடன் உள்ளது. நம் முப்படைகளின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்குகிறேன்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்திற்கு பின், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் நேற்று நடந்தது. இதில் சாலை போக்குவரத்து, சுகாதாரம், வேளாண், ரயில்வே உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான கமிட்டியும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்துடனும், பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு அளிக்கப்போகும் பதிலடி குறித்து, அடுத்தடுத்து நடந்த இந்த கூட்டங்களில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால், எந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது.

மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில், உயர்மட்ட கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.

இதில், பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பிரிகு ஸ்ரீனிவாசன், அசாம் ரைபிள்ஸ் படையின் இயக்குநர் ஜெனரல் விகாஸ் லக்கேரா ஆகியோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...