தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் விவசாயிகளை ஏமாற்றி வரும் தி.மு.க., அரசு, இதற்கு மேலும் ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ. 3,550 ஆக உயர்த்தி வழங்கியுள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, தமிழகக் கரும்பு விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2015 – 16 ஆண்டுகளில் ரூ.2,300 ஆக இருந்த விலையை, கடந்த பத்து ஆண்டுகளில் ரூ.1,250 அதிகரித்து மத்திய அரசு வழங்குகிறது.

ஆனால், தனது 2021 தேர்தல் அறிக்கையில், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4,000 வழங்கப்படும் என்று பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.2,850 வழங்கியது மத்திய அரசு. மீதமுள்ள ரூ.1,150 விலையை சேர்த்து, விவசாயிகளுக்கு ரூ.4,000 ஆக திமுக அரசு வழங்கும் என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழக அமைச்சர்கள் பொய் கூறிக் கொண்டிருந்தார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, ரூ.4,000 வழங்குவதாகக் கூறியது திமுக அரசு. தற்போது மத்திய அரசு கரும்பு ஒரு டன்னுக்கு, ரூ.3,550 வழங்குகிறது. இதனுடன் அந்த ரூ.1,150 சேர்த்து, ஒரு டன்னுக்கு ரூ.4,700 ஆக, கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு வழங்குவதுதான் நியாயம்.

ஒவ்வொரு ஆண்டும் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்துத் தமிழக விவசாயிகளை ஏமாற்றி வரும் திமுக அரசு, இதற்கு மேலும் தமிழக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது நடக்காது.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...