எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போருக்கு செல்வேன் – நயினார் நாகேந்திரன்

தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தைவிட இன்று நான் அடைந்த சந்தோஷம் மிகவும் அதிகம். இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. காஷ்மீர் பயங்கரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். பிரதமர் மோடி தனி நபர் அல்ல, 140 கோடி இந்தியர்களின் சிகரமாக விளங்குகிறார். 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இந்தத் தாக்குதலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி. இந்தியாவின் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கக் காரணம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்கள் ‘செந்தூரம்’ அதாவது குங்குமத்தை வைக்க முடிவவில்லை. அதற்காகத் தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

போர் ஒத்திகை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை’ என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...