டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. பின்னர், நேற்று முன் தினம், மாலை 5:00 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமல் ஆனது. இந்நிலையில் டில்லியில் பிரதமர் மோடி அவரது இல்லத்தில், முப்படை தலைமை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
எல்லையில் தற்போதைய சூழல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடந்தது. தற்போது ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்தது. ஆலோசனை முடிந்து அனைத்து அதிகாரிகளும் புறப்பட்டனர்.
பாகிஸ்தான் அரசிடம் பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என ராணுவ அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டு கொண்டதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |