இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு

கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்து உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நாட்டை தன்னிறைவு பெற செய்யும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தன்னிறைவு இந்தியா ‘ மற்றும் ‘ மேக் இன் இந்தியா’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடவும், முதலீடுகளை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்யவும், இந்தியாவை சர்வதேச விநியோக சங்கிலியாக மாற்றவும், இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மீது மத்திய அரசு கொண்ட ஆர்வம் காரணமாக, பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய பாதுகாப்பு உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் லாபமும் அதிகரித்து உள்ளது.

ஏராளமான பாதுகாப்பு ஹப்களை அமைத்ததுடன், பாதுகாப்பு மற்றும் வான்வெளி உற்பத்தியிலும் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள், முக்கிய பாதுகாப்பு மற்றும் வான்வெளி தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2029 ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறை முன்
எப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து வருகிறது. இதற்கு ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டம் ஊக்கமளித்து வருகிறது. 2013- 2014 ம் நிதியாண்டில் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடஏற்றுமதி 2024- 2025ம் நிதியாண்டில் ரூ.23, 622 கோடியாக அதிகரித்து உள்ளது. இது 34 மடங்கு அதிகம் ஆகும்.

மேலும்2020-21- ரூ.8,345 கோடி

2021-22- ரூ.12,815 கோடி

2022-23- ரூ.15,920 கோடி

2023-24- ரூ.21,083 கோடி

2024-25- ரூ.23,622 கோடி அளவுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஆகி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...