பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த வீரர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி பஞ்சாபில் உள்ள உன்சி பஸ்சி மற்றும் காஷ்மீரின் பதன்கோட் விமானப்படை தளங்ளுக்கு சென்று வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் பிஎஸ்எப் வீரர்களையும் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, விமானபடைதளங்களை மற்றும் ராணுவ தளங்களை பாதுகாத்த ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு பாராட்டுகள். ராணுவம் மற்றும் விமானப்பட தளங்களில் உள்ள முக்கியமான சொத்துகளை குறிவைத்து தாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்ததற்கும் பாராட்டு. ராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |