ஜம்மு – காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஸ்ரீநகரில் பாதாமி பாக் கன்டோன்மென்ட் ராணுவ முகாமில் ஆய்வு செய்தார்.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:
உலகளவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை சமீபத்தில் நம் ராணுவம் நிகழ்த்தி காட்டியது.
எத்தனை பேர் பலியாகினர் என்பதை எண்ணும் பொறுப்பை எதிரிகளுக்கு கொடுத்துவிட்டோம்.
நம்முடைய நோக்கம் என்ன, அதை எவ்வளவு துல்லியமாக தாக்குதல் நடத்தினோம் என்பதை இந்த ராணுவ நடவடிக்கை வாயிலாக உலகுக்கு காட்டியுள்ளோம்.
அணு ஆயுத மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.
14-May-2025
அதே நேரத்தில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்று பொறுப்பு இல்லாமல் பாகிஸ்தான் கூறியதையும் இந்த உலகம் பார்த்துள்ளது.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இவ்வாறு பொறுப்பில்லாமல், முரட்டுத்தனமாக செயல்படும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பதே அந்தக் கேள்வி.
இது தொடர்பாக, ஐ.ஏ.இ.ஏ., எனப்படும் சர்வதேச அணு சக்தி முகமை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |