மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: ஆரோக்கியமான எதிர்காலம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஒருங்கிணைந்த தொலைநோக்கு மற்றும் ஒத்துழைப்பை பொறுத்து அமையும். உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் ‘ இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுகின்றனர். தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்ப நிலையில் கண்டறியப்படுகின்றன.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளை கண்டறிய டிஜிட்டல் தளம் உள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்து உள்ளது. இதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற உதவுகிறது.

டெலிமெடிசன் மூலம், யாரும் டாக்டரிடம் இருந்து வெகுதொலைவில் இல்லை. நமது இலவச டெலிமெடிசன் சேவை மூலம்340 கோடி ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

பாதிக்கப்படும் மக்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்து தான் உலகின் நலன் அமைகிறது. உலகின் தெற்கு பகுதி நாடுகள், சுகாதார சவால்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் அணுகுமுறை பிரதிபலிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் நிலையான மாதிரிகளை வழங்குகிறது.

ஜூன் 11ல் சர்வதேச யோகா தினம் வருகிறது. இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து நாடுகளையும் வரவேற்கிறேன். ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற மையக்கருத்து அடிப்படையில் இந்தாண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பொது மருந்தகங்கள், தரமான மருந்துகளை சந்தையை காட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இதன் மூலம் அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...