பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு

‘தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது’ என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகியால் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அரக்கோணம் கல்லூரி மாணவி, தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். மாணவி கொடுத்த புகாரின் கீழ், கடந்த 10ம் தேதி அன்றே வழக்குப் பதிவு செய்ததாகக் கூறும் போலீசார், இதுவரை, தி.மு.க., இளைஞரணி நிர்வாகியைக் கைது செய்யவில்லை. மாறாக, மாணவி போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்களை, தி.மு.க.,வினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் மாணவி குற்றம் சாட்டியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளான வழக்கில், மாணவி குறித்த தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டு அச்சுறுத்த முயற்சித்த தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் குற்றங்களிலும் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இத்தகைய சூழலில், தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தி.மு.க., அரசின் கடமை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...