உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்

‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் அமித்ஷா பேசியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதி முகாம்களை மட்டுமே அழித்தோம். பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்து தாக்கவில்லை.உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல நாடுகள் பதில் அளித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த பதில் அவற்றில் மாறுபட்டது.

பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படையினர் மிகச்சிறந்த முறையில் பதிலடி கொடுத்தனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு உலகமே பாராட்டுகிறது. நான் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன். நமது நாடு பல தசாப்தங்களாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது.

பஹல்காமில், பயங்கரவாதிகள் நம் மக்களை கொடூரமாக கொன்றனர். பிரதமர் மோடி தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். அந்த பதில் இன்று தெளிவாகத் தெரிகிறது. முழு உலகமும் இப்போது நமது ஆயுதப் படைகளையும், அவர்களின் தாக்குதல் திறன்களையும் பாராட்டுகிறது.

துல்லியமாக தாக்குதல்
பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியமாக தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...