டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு படம் எடுத்துக் கொண்டனர்.
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (மே 24) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையை முன் வைத்தார். கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
இதற்கிடையே, இன்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அவருக்கு மாலை 4.10 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |