‘பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் 60 கோடி ஏழை மக்களுக்கு, தலா ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது,’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான குடியிருப்பு வசதியான, ‘ஸ்வஸ்தி நிவாஸ்’ திட்டம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு உதவிய தனியார் நிறுவனங்களை பாராட்டுகிறேன்.
தேசிய புற்றுநோய் நிறுவனத்திற்கான திட்டமிடல் நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்குத் தெரியும். இன்று, நான் பல வளர்ந்து வரும் நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் பலவற்றில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தேசிய புற்றுநோய் நிறுவனம், சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் இந்த நிறுவனத்தை அமைப்பதிலும் தொடங்குவதிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் தொலைநோக்கு மற்றும் உறுதிப்பாட்டின் சக்தியின் அடிப்படையில் செயல்படுகின்றன.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |