குஜராத்தில் 2வது நாளாக பிரதமர் மோடி ரோடு ஷோ

குஜராத்தில் பிரதமர் மோடி 2வது நாளாக ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வதோதராவில், ரயில்களுக்கான 9,000 ஹெச்.பி., உள்ள இன்ஜின்கள் தயாரிக்கும் ஆலை உட்பட, 24,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களையும், வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகளையும் துவக்கி வைத்தார். முன்னதாக வதோதராவில் ரோடு ஷோ நிகழ்த்தினார்.

இந்த நிலையில், அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று காந்தி நகர் சென்றுள்ள பிரதமர் மோடி, 2வது நாளாக ரோடு ஷோ நடத்தினார். அவரை சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்ற தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

தொடர்ந்து, குஜராத் நகர்ப்புற வளர்ச்சியின் 20ம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். மஹாத்மா மந்தீரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1,006 கோடியில் கட்டப்பட்ட 22,000 குடியிருப்புகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

காந்திநகரில் உள்ள யூ.என்., மேக்தா இருதயவியல் கல்வி நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார். இதேபோல, பல திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயà ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்?   கலச ஸ்தாபன விதிகள்: நவராத்திரியில் கவனிக்க வேண்டிய 6 ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண் ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண்டும்? பிரபல ஜோதிடர் ஸ்ரீ விமல் ஜெயின் கூறுகையில்: அதிகாலை ...

திதி வாரியாக அம்மனுக்கு சாற்ற வ ...

திதி வாரியாக அம்மனுக்கு சாற்ற வேண்டிய மலர்கள் ஒவ்வொரு திதியிலும் குறிப்பிட்ட மலர்களைச் சமர்ப்பிப்பது விசேஷமானது: பிரதமை: சைலபுத்ரி ...

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிà® ...

வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டிலிருந்து, வளர்ச்சி அடைந்த பாரதம் புதிய சிகரம்தொடும் தமிழ்நாட்டை படைக்க மத்தியஅரசிடம் இருந்து தேவையான ...

நவராத்திரி நெய் தீபமா அல்லது எண ...

நவராத்திரி நெய் தீபமா அல்லது எண்ணெய் தீபமா? தீபம் ஏற்றுவதற்கான விதிகள் மற்றும் நன்மைகள் அக்டோபர் 11, 2026 ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...