டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல்முறையாக இந்தியா வந்துள்ள அவரை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மல்த்ரா நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு பாலம் விமானப்படை தளத்தில் பாரம்பரிய முறைப்படி வீரர்களின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரந்திர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘பராகுவே அதிபர் பலாசியோஸின் இந்தப் பயணம் இருநாடுகளின் உறவை பலப்படுத்தும் விதமாக அமையும்,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை பராகுவே அதிபர் பலாசியோஸ் சந்தித்து பேசினார். முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இருநாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

மேலும், பராகுவே அதிபர் பலாசியோஸ் மும்பை செல்ல உள்ளார். அங்கு, தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை சந்தித்து பேச உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...