ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன்

”ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

வரும் ஜூன் 8ம் தேதி மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேலம்மாள் திடலில் தமிழக பா.ஜ.,வின் அமைப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

இதற்கான பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினை விட்டு தமிழகம் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகம் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோலில் போய்விட்டது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி செய்ய வேண்டும்.

ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக சிந்தனை செய்யக் கூடிய ஒரு தேசியவாதி. அவர் நல்ல விஷயங்களில் தலையீடுவது நல்லது தான். அமித்ஷா – அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை.

ராமதாஸ் – அன்புமணி பேச்சுவார்த்தையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. தே.மு.தி.க.,வும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு. மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள். தி.மு.க.,விற்கு ஷா என்றாலே பயம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...