குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி

தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை குற்றங்களுக்கு மூளையாக செயல்படுபவரை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொங்குப் பகுதிகளில் இதுவரை நடந்த அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டு பிடித்து கைது செய்துவிட்டோம் என
அறிவாலயம் அரசு ஒருபுறம் மார்தட்டிக் கொண்டிருக்க, அதே பகுதியில் அதே பாணியில் மீண்டுமொரு கொலை அரங்கேறியுள்ளது, மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும் மக்களின் கண்டனக் குரல்களை ஒடுக்கவும் யாரையோ கைது செய்துவிட்டு குற்றவாளி அகப்பட்டுவிட்டதாக தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது.

எனவே, தமிழகத்தில் குறிப்பாக கொங்குப் பகுதிகளில் பெருகி வரும் கொலை, கொள்ளை குற்றங்களின் மூளையாக செயல்படுவோர் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ., சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...