‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: “140 கோடி இந்தியர்களின் கூட்டான பங்கேற்பின் மூலம் சிறப்பான ஆளுகை, மாற்றம் என்பதில் தெளிவான கவனம் செலுத்தியது பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவாகவும், பெருமளவிலும், உணர்வுப்பூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை தந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி முதல் சமூக முன்னேற்றம் வரை எனது அரசு மக்களை மையப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்குதல், அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் என்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தியா தற்போது அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய முக்கிய குரலாகவும் விளங்குகிறது.

நமது கூட்டான முயற்சிக்கு பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதை நம்பிக்கையுடனும், புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்துடனும் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். சிறப்பான ஆளுகை மற்றும் மாற்றத்தின் மீது தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளாலும், கூட்டான பங்கேற்பாலும் நல்ல நிர்வாகம், மாற்றம் ஆகியவற்றின் மீது தெளிவான கவனத்துடன் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றங்களை இந்தியா கண்டுள்ளது.

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரைவாகவும், பெருமளவிலும், உணர்வுபூர்வமாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களை தந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி முதல் சமூக முன்னேற்றம் வரை மக்களை மையப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்குதல், அனைத்துத் துறையிலும் முன்னேற்றம் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியா தற்போது அதிவேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய முக்கிய குரலாகவும் விளங்குகிறது. நமது கூட்டான முயற்சிக்கு பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதை நம்பிக்கையுடனும், புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்துடனும் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

கடந்த 11 ஆண்டுகள் ஆக்கபூர்வமான பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்கப்படுத்தியுள்ளன. மாற்றத்திற்கான இந்தப் பயணத்தைக் காண விளையாட்டுக்கள், விநாடி வினாக்கள், கள ஆய்வுகள் உள்ளிட்ட கலந்துரையாடல் வழியாகவும், தகவல் அறிதல், ஈடுபடுதல், ஊக்கம் பெறுதல் வழியாகவும் நமோ செயலி உங்களை அழைத்துச் செல்கிறது. இந்தியாவின் முன்னேற்றப் பயணம் சுவாரசியமான வீடியோக்கள், தகவல் வரைகலைகள், கட்டுரைகள் போன்றவற்றின் மூலம் நமோ செயலியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆண்டுகளில் எங்கள் அரசின் ஒவ்வொரு திட்டமும் ஏழை எளிய சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் சாமானிய மக்களின் நலனை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியது. உஜ்வாலா அல்லது பிரதமரின் வீட்டுவசதி, ஆயுஷ்மான் பாரத் அல்லது பாரதிய மக்கள் மருந்தகம் அல்லது பிரதமரின் விவசாய கவுரவிப்பு நிதி என எந்தத் திட்டமாக இருந்தாலும் அனைத்துத் திட்டங்களும் நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கைகளை வழங்கின. இந்தக் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வுடன் சாத்தியமான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பொற்காலம்: அமித் ஷா: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 11 ஆண்டுகள், பொது சேவைக்கான அர்ப்பணிப்பு, தீர்க்கமான முடிவுகள் ஆகியவற்றின் பொற்காலம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், “இந்த 11 ஆண்டு கால சேவையில், நாடு பொருளாதார மறுமலர்ச்சி, சமூக நீதி, கலாச்சார பெருமை மற்றும் தேசிய பாதுகாப்பின் புதிய சகாப்தத்தைக் கண்டுள்ளது. தலைமைத்துவப் பண்பில் தெளிவாகவும், உறுதியாகவும், பொது சேவையில் கவனம் செலுத்தும் நோக்கிலும் இருக்கும்போது, சேவை, பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் புதிய உச்சங்களை எட்ட முடியும் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது.

2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட போது, நாட்டில் தெளிவான கொள்கை இல்லாத நிலையும், ஊழல் மலிந்தும் இருந்தது. நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்ததுடன், நிர்வாக அமைப்பின் செயல்பாடுகள் மந்தமான நிலையில் இருந்தது. இந்த 11 ஆண்டு கால பொதுச் சேவையில், ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற அணுகுமுறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது.

விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரது நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...