தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி பெருகிவரும் நிலையில் “மாண்புமிகு உத்திர பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களும் மாண்புமிகு ஆந்திர துணைமுதல்வர் திரு. பவன் கல்யாண் அவர்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பியுள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. PK.சேகர் பாபு அவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.
பார்முழுவதும் அருள்பாளிக்கும் கடவுள் முருகப்பெருமான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆறுமுகனின் பக்தர்கள் உலகெங்குமுள்ள மூலைமுடுக்கெல்லாம் இருப்பர். ஆக, ஜூன் 22-ஆம் தேதி நடைபெற இருக்கும் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு பக்தர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதிலிருந்தும் யார் வேண்டுமானாலும் வரலாம்.
பழனியில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஜப்பானில்இருந்து சிலர் கலந்து கொண்டதாக திமுக அரசால் பெருமைபேசப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு உத்திர பிரதேச முதல்வரும் ஆந்திர துணை முதல்வரும் வரக்கூடாது என்பது முறையா? உண்மையில், மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் வரக்கூடாது என்பது
அமைச்சரின் நிலைப்பாடா? அல்லது, ஆந்திரா மற்றும் பிறமாநிலங்களில் இருந்து பக்தி மிக்கவர்கள், யாருமே தமிழகத்திற்கு வரக்கூடாது என்று சொல்கிறாரா எனும் சந்தேகம் எழுகிறது.
அரசியலைத் தாண்டி ஆன்மிக ரீதியாக நடத்தப் படும் மாநாட்டில் கூட மாநில அடிப்படையில் பிளவுவாதத்தை தூண்டுவது தவறு. எனவே, பக்திக்கு எந்த எல்லையும் இல்லை என்பதை உணர்ந்து, மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
– மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |