சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், இந்த நிகழ்வில் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பிகாரில் காட்டு ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்து மாநிலத்தை சூறையாடிவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்களியுங்கள். நாங்கள் அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால், அதிகாரப் பதவிகளுக்கு ஆசை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜன தளமும் (ஆர்ஜேடி), காங்கிரஸும் இணைந்து சொந்த குடும்பத்துக்கான வளர்ச்சியை மட்டுமே பார்க்கின்றனர். மாநிலத்துக்கான வளர்ச்சி எதுவுமில்லை.
இந்தியாவில் வறுமைக்கு காங்கிரஸ்தான் காரணம். காங்கிரஸின் தலைவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறியபோது, நாட்டில் உள்ளமக்கள் ஏழைகளாகவே இருந்தனர். இதில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகார் பேரவைத் தேர்தலில் பாஜக-ஜேடியு கூட்டணி, ஆர்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தனுடன் நேருக்கு நேரான மோதலில் மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இலக்கு வைத்துள்ளது.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை மீண்டும் தக்கவைக்கும் முனைப்பில், பிரதமர் மோடி கடந்த 5 மாதங்களில் மட்டும் 5 முறை பிகாருக்கு வருகை தந்திருக்கிறார்.
ஆர்ஜேடியின் கோட்டைகள் எனக் கருதப்படும் சிவான், கோபால்கஞ்ச், சாப்ரா ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
அம்பேத்கரின் உருவப்படத்தை லாலு பிரசாத் யாதவ் அவமதித்ததாகக் கூறப்படும் சர்ச்சையைத் தொடர்ந்து, ஆர்ஜேடி கட்சியை குறிவைத்து பேசிய பிரதமர் மோடி, “அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களை பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் வலியுறுத்தினார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |