பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு

அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் திறந்துள்ளார். தற்போது மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது” என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை, நான்கு நாட்களுக்கு முன்பாக, கடந்த 16ம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். ஆனால் கட்டடம் திறக்கப்படுவதற்கு முதல் நாளே, இரண்டு அறைகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து, அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்திருக்கிறார்கள்.

முதல்வர் திறப்பு விழாவிற்கு பிறகு, தற்போது, மீண்டும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பேட்ச் வொர்க்கில் கட்டப்பட்ட தரமற்ற கட்டிடத்தைத்தான் முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் ஊராட்சி மன்ற ஊழியர்கள் யாரும் அந்த அறையில் இல்லாததால், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஆனால் எப்போது கட்டடம் இடிந்து விழுமோ என்ற பயத்தில், இனி எப்படி ஊழியர்கள் அங்கிருந்து பணியாற்ற முடியும்? உடனடியாக, தரமற்ற முறையில் கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சார்பில் இந்தக் கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பிறகே, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...