முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கை; மக்கள் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், ஒரு நாள் விளம்பரத்துக்காகச் செயல்படுத்தினால் என்ன ஆகும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம், தி.மு.க., அரசால் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, முதல்வர் மருந்தகம்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடக்கம் முதலே போதிய மருந்துகள் அரசால் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானது. பலமுறை கோரிக்கை வைத்தும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்காததால், வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க, முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் மருந்தக உரிமையாளர்கள்.
பொதுமக்களும், முதல்வர் மருந்தகங்களில் மருந்துதான் கிடைக்கவில்லை, மாவாவது கிடைக்கிறதே என்று வாங்கிச் செல்கின்றனர். இதற்குப் பேசாமல், முதல்வர் மாவகம் என்று பெயர் வைத்திருக்கலாம். நான்காண்டு காலமாக, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., ஆட்சிக்கு, இந்தப் பெயர் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |