யோகா என்பது உள்ளுணர்வின் மூலம் ஆன்மாவை உணர்ந்து கொள்ளும் பயணம்

மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (மெப்ஸ்) என்ற சிறப்பு பொருளாதார மண்டலம் அதன் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து சிறிது விலகி, அமைதி, வலிமை மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றின் புத்துணர்ச்சிக்கான தருணமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டது. உலக அளவில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினமானது “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் உற்சாகம் மற்றும் நெறிமுறையுடன் கொண்டாடப்பட்டது.

இந்த ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், புவியின் நலவாழ்வையும், கலை உணர்வுடன் பிரதிபலிக்கும் வகையில் யோகா பயிற்சி நடைபெற்றது. காலையில் நடைபெற்ற யோகப் பயிற்சியில், ஊழியர்கள், பணியாளர்கள், அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வு, யோகாவின் முழுமையான வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சி மெட்ராஸ் ஏற்றுமதி மண்டலத்தின் துணை மேம்பாட்டு ஆணையர் திருமதி ஜெனிஃபர் வரவேற்பு உரையுடன் தொடங்கியது. குறிப்பாக, இன்றைய பரபரப்பான பணிச்சூழலில், உடல், மனம், உணர்வு ஆகியவற்றுக்கு புத்துணர்வு அளிப்பதற்கும் நலவாழ்வுக்கும் யோகப் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரின் நிபுணத்துவ வழிகாட்டுதலின் கீழ், யோக பயிற்சிகள், ஆசனங்கள் மூச்சுப் பயிற்சியை அவர்கள் மேற்கொண்டனர். பின்னர் அமைதி மற்றும் கூட்டு தியான பயிற்சியுடன் இந்த அமர்வு நிறைவு பெற்றது. நெகிழ்வுத்தன்மை, தோற்றம், மனத் தெளிவு மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் நன்மைகளை இந்த யோகப் பயிற்சி வலியுறுத்துவதாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் நன்றி உரையாற்றிய மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் துணை மேம்பாட்டு ஆணையர் திரு பிரபு குமார், ஊழியர்களின் நலவாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள், பயிற்றுநர்கள், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

பிற்பகலில் யோகக் கலையின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில், வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்களின் யோகப் பயிற்சி, தத்துவம் மற்றும் நலவாழ்வை மையமாக கொண்ட கேள்விகள் இடம்பெற்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...