”எங்களுடைய கூட்டணி இறுதியானது. கூட்டணி உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தை, பார்த்து எங்களது பலத்தை தெரிந்து கொண்டால் சரி. முதல்வர் ஸ்டாலின் காஸ் சிலிண்டர் விலையை குறைப்பாரா? குறைப்பேன் என்று சொல்லி, 4 ஆண்டுகள் ஆகி உள்ளது. டீசல், பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொன்னார்கள். டீசல் விலையை மற்றும் கொஞ்சம் குறைத்தார்கள். ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. கட்சி பணிகள் தொடர்பாக, நாங்கள் ஆலோசனை நடத்தியது எல்லாம் பற்றி சொல்ல முடியாது.
இறுதியானது
எங்களுடைய கூட்டணி இறுதியானது. உறுதியானது. பா.ஜ., கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது. தமிழகத்தில் பா.ஜ, கூட்டணியை உடைக்கும் முயற்சி நடக்கிறது. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை ஹிந்து முன்னணி நடத்தியது. அதில் நாங்கள் கலந்து கொண்டோம். என்னிடம் கேட்கும் கேள்விகளை எல்லாம் முதல்வரிடம் கேளுங்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்ற கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டு உள்ளார்.
புதிய திருப்பம்
மதுரையில் நடந்த மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து ஆ.ராசா தகாத வார்த்தையால் பேசியுள்ளார். நான் முதல்வர் ஸ்டாலினை மதிப்பிற்குரிய முதல்வர் என்று ஏன் சொல்கிறேன். அவர் எனக்கு முதல்வர் என்ற முறையில் மரியாதை உடன் பேசுகிறேன். தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரம் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் தகாத வார்த்தையால் பேச, ஆ.ராசாவை அனுமதிக்கிறாரா?
வரவேற்போம்
எப்போதும் ஒரு கட்சி வெற்றி பெற போகிறது என்றால் அதன் பக்கம் எல்லோரும் வந்து கொண்டு இருப்பார்கள். அதனால் யார் எங்களது கட்சிக்கு வந்தாலும் வரவேற்போம். ஹிந்து மதத்தில் என்ன பாகுபாடு இருக்கிறது. பாகுபாடு என்பது எங்கும் கிடையாது. ஹிந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. இவர்கள் மாதிரி ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமுதாயத்திற்கு எதிராகவும் பேசி, சந்தர்பவத்தை பயன்படுத்தும் சந்தர்பவாதிகள் எங்களிடம் யாரும் கிடையாது.
அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்? என்று தமிழக அரசுக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று. தி.மு.க., அரசின் அவல ஆட்சியில் நமது சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.
“சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிடில் அரசு அவற்றை இழுத்து மூடி விடலாம்” என சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த போதும், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?
எனவே, கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத தி.மு.க., அரசின் அலட்சியத்தால் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சற்று ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |