13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு: நயினார் நாகேந்திரன் பெருமிதம்

13 மொழிகளில் மத்திய ஆயுதக் காவல்படை தேர்வு எழுதுவதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் 95 சதவீதம் பேர் அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுதி பயனடைவர் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மத்திய ஆயுதக் காவல்படை(CAPF) தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்ற நிலை இருந்தது.

அன்று, பல அமைச்சர்களை மத்தியில் வைத்திருந்த திமுக அரசு, எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழியில் மத்திய அரசுத் தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கவில்லை.

ஆனால் தற்போது, நமது பிரதமர் மோடி, தலைமையிலான மத்திய அரசின் கீழ், பல மத்திய அரசுத் தேர்வுகளை 13 மொழிகளில் எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 95% பேர் அவரவர் தாய்மொழிகளில் தேர்வுகளை எழுதுகின்றனர் என்பது இமாலய சாதனை.

நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவர்களும் மத்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான கதவுகள் இதனால் திறக்கும்.

இத்தகைய செயல்களால், யார் உண்மையான மொழிக்காவலர்கள், யார் மொழியை வைத்து அரசியல் மட்டும் செய்பவர்கள் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதை என்னால் நிச்சயமாக உணரமுடிகிறது.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...