உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சீர்திருத்தம் குறித்து இன்று (ஜூலை 6) உரையாற்றினார்.

அரசுமுறைப் பயணமாக 5 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பிரேசில் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரியோ டி ஜெனீரோவில் 17வது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார். முன்னதாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ரமபோசாவை சந்தித்துப் பேசினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 5 கூடுதல் உறுப்பு நாடுகளில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் முதல் அமர்வில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது,

”பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தத்திற்கான அமர்வில் உரையாற்றினேன். இதில், உலக வளர்ச்சிக்கு முன்பு இருந்ததை விட தெற்குலகின் குரல் ஏன் மிகவும் முக்கியமானது என்பது குறித்த எனது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டேன். தெற்குலகின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்காக உலகளாவிய நிறுவனங்கள் போதுமான பிரதிநிதித்துவத்தை ஏன் தருகின்றன என்பது குறித்தும் உரையாற்றினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...