“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உச்சி மாநாடு நேற்றுத் தொடங்கியது. இதில் சர்வதேச அளவிலான அமைதி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகளின் மீது அமெரிக்கா அதிக வரி விதித்திருப்பது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியை உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்றனர்.

இம்மாநாட்டில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தின்போது பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது என்றும், அதேபோல் பாதிக்கப்பட்டவர்களையும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் ஒரே தராசில் எடை போடக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியபோது, “பஹெல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது. அதேசமயம் கோழைத்தனமானது. இந்தியாவின் அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான நேரடி தாக்குதல் அது. உலகம் எதிர்கொள்ளும் மிகவும் மோசமான சவால் பயங்கரவாதம். ஏப்ரல் 22ஆம் தேதியன்று பஹெல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலானது இந்தியா மீதானது மட்டுமல்ல; ஒட்டு மொத்த மனித குலத்தின்மீது விழுந்த அடி.

எனவே பயங்கரவாத்தை கண்டிப்பதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடந்த மோதலின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக ஆதரவு அளித்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தடை விதிப்பதில் எந்த தயக்கமும் காட்டக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், அதற்கு ஆதரவு அளிப்பவர்களையும் ஒரே தராசில் எடைபோட முடியாது.

தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக, மறைமுகமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் தீவிரம் காட்டுகிறோமா என்பது தற்போதும் விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது. அமைதியான, பாதுகாப்பான சூழலில்தான் வளர்ச்சி சாத்தியமாகும். இதற்கு பிரிக்ஸ் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய மோடி, காசாவின் நிலைமை கவலையளிப்பதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் எவ்வளவு கடினமான சூழ்நிலை நிலவினாலும் மக்களின் நன்மைக்கு ஒரே வழி என்றால் அது அமைதிப்பாதை என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது என்றும் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...