இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அஸ்தரா ஏவுகணை ஒடிசா கடலோர பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படையுடன் இணைந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து அஸ்தரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

ஒடிசா கடலோர பகுதியில் சுகோய் போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மூலம் இருவேறு இடங்களில் அனுப்பப்பட்ட இரண்டு இலக்குகளையும் அஸ்திரா ஏவுகணை துல்லியமாக அழித்தது.

ஏவுகணையின் அனைத்து செயல்பாடுகளும் ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை மையத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டபோது அவை மிக சிறப்பாக செயல்பட்டன என்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் பாதுகாப்புத்துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. மத்திய பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் விமான நிறுவனம் உள்பட 50க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அஸ்தரா ஏவுகணை உருவாக்கத்தில் பங்கெடுத்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏவுகணை உருவாக்கம் மற்றும் வெற்றிகரமான சோதனையில் பங்கெடுத்த அனைவருக்கும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...