பிரபல திரைப்பட ஆளுமை பி சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்படம் மற்றும் கலாச்சாரத்தின் முன் மாதிரி அடையாளமாக அவர் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது பன்முக செயல்திறன்கள் பல தலைமுறைகளுக்கு அழியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய அவரது பணிகள் பன்முக திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பிரபல திரைப்பட ஆளுமை பி சரோஜா தேவியின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய திரைப்படம் மற்றும் கலாச்சாரத்தின் முன் மாதிரி அடையாளமாக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பன்முக செயல்திறன்கள் பல தலைமுறைகளுக்கு அழியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய அவரது பணிகள் பன்முக திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |