மத்திய அரசிடம் வாங்கும் நிதி எங்கு தான் செல்கிறது? தமிழக அரசைக் கேட்கிறார் அண்ணாமலை

‘எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது?,’ என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை; திருப்பூர் மாவட்டம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்ட கோடந்தூர் திருமூர்த்திமலை கிராமத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இன்று வாழவே முடியாத நிலைக்கு சிதிலமடைந்திருந்தும், வேறு வழியின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறார்கள் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள்.

வீடுகள் இடிந்து, மின்சார வசதி, சரியான குடிநீர் வசதி, முறையான சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக அவதிப்பட்டு வரும் மக்கள், அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கைகள் பல விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. திமுக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தான் ஆச்சரியம்.

வருவாய்த்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு 110 வீடுகளைப் புதுப்பித்துத் தரப் பழங்குடியினர் நல ஆணையம், ஆதி திராவிடர் நலத்துறைக்குப் பரிந்துரைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையோ, நிதியோ ஒதுக்கப்படவில்லை என்று மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறியிருப்பது மலைவாழ் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் திமுக அரசிற்கு இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.

2022ம் ஆண்டு வரை உள்ளாட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருக்கும் திருமூர்த்திமலை மக்கள், முதல் முறையாக வாக்களித்து தங்களில் ஒருவரைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து பஞ்சாயத்து மூலம் வீடுகளைப் புதுப்பிக்கத் தீர்மானம் நிறைவேற்றி காலங்கள் பல ஆகியும் அவர்களின் நிலைமை மாறவில்லை. எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதி எங்கு தான் செல்கிறது?

உடனடியாக திருமூர்த்திமலை மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிட வேண்டும். மேலும், இது போன்ற, மற்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்களையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...