தென்கிழக்கு ஆசியாவில் கூட்டணி வலுவாகிறது: பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்க இந்தியா தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார். இதற்கிடையே, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அவரை சந்தித்துப் பேசினார்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன் நல்ல உறவை இந்தியா கொண்டுள்ளது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் உடனான துாதரக உறவு, 75 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டியும், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார்.

நம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிலிப்பைன்ஸ் அதிபரை நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

இன்று டில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச உள்ளார். மேலும், இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனையும் நடைபெற உள்ளது. அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோரையும் அவர் சந்திக்க உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...