ராகுலை போல பொய் பேசாதீங்க; எம்.பி.,க்களுக்கு பிரதமர் அறிவுரை

”ராகுலை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. இது நமக்கு ஒரு பாடம். அவரை போல ஒருபோதும் பொய் பேச வேண்டாம் என, தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்,” என, பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களின் கூட்டம் நடந்தது.

இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.

‘ஆப்பரேஷன் சிந்துார், ஆப்பரேஷன் மஹாதேவ்’ நடவடிக்கைகளுக்கு, ஆயுதப் படைகளை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எம்.பி.,க்களிடையே பேசிய பிரதமர் மோடி, தே.ஜ., கூட்டணியின் எதிர் கால திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் பா.ஜ., மூத்த தலைவரும், பார்லி., விவகாரத் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு கூறியதாவது:

‘ராகுல் எப்போதும் தவறான தகவல்களையே தெரிவித்து வருகிறார். உச்ச நீதிமன்றம் கூட அதை கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

‘இது நமக்கு ஒரு பாடம். ராகுலை போல ஒருபோதும் பொய் பேச வேண்டாம்’ என, பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி மூன்று வாரங்கள் ஆகியுள்ளன. ஆனால் ஒரு மசோதா கூட நிறைவேற்றப்படவில்லை.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியே இதற்கு காரணம். ராஜ்ய சபாவில் சபைக் காவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பு படையினர் இருப்பதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுவது முற்றிலும் பொய்.

சட்டசபையில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, லோக்சபாவில் அறிமுகம் செய்வோம். பார்லி., சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...