மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள்

டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8, 2025) நடைபெற்ற மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அசாம் மற்றும் திரிபுராவுக்கு 4250 கோடி ரூபாய் சிறப்புத் தொகுப்பை அமைச்சரவை வழங்கியுள்ளது. இது தவிர, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்காக ரூ.12,060 கோடியும், வீடுகளுக்கு மலிவு விலையில் எல்பிஜி வழங்க ரூ.30,000 கோடியும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த ரூ.4,200 கோடி மற்றும் மரக்காணம்-புதுச்சேரி 4 வழிச் சாலைக்கு ரூ.2,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.52,667 கோடியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.

எல்பிஜி இணைப்பு மானியம்
ரக்ஷாபந்தனுக்கு ஒரு நாள் முன்பு மோடி அமைச்சரவை பெண்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2025-26 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு இலவச மானியத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, அரசாங்கம் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுக்குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் நோக்கம் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். இதுவரை 10.33 கோடி உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.

நடுத்தர வர்க்கத்தினருக்கு 30 ஆயிரம் கோடி
நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவான எல்பிஜி வழங்க ரூ.30 ஆயிரம் கோடி மானியம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். தற்போதைய புவிசார் அரசியலில் காரணமாக எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாகக் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு மானியம் வழங்கப்படுகிறது” என்றார்.

பொறியியல் கல்லூரிகளுக்கு உதவி
தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு (MERITE) திட்டத்திற்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீட்துடுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது இந்தியா முழுவதும் உள்ள 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மரக்காணம்-புதுச்சேரி நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற உள்ளத
தமிழகத்தில் மரக்காணம் மற்றும் புதுச்சேரி 4 வழிச்சாலை (NH-332A)-ஐ அமைக்க மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக அரசாங்கம் ரூ.2,157 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான இருவழி தேசிய நெடுஞ்சாலை சாலை இருப்பதால், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மேபடுத்த ஒப்புதல் அளிக்கபப்ட்டு நிதி ஒதுக்க்கப்பட்டது.

அஸ்ஸாம் மற்றும் திரிபுராவுக்கு சிறப்பு தொகுப்பு
அஸ்ஸாம் மற்றும் திரிபுராவில் உள்ள இன மற்றும் பழங்குடி சமூகங்களின் மேம்பாட்டிற்காக, சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளின் (SDPs) மத்திய துறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ₹4,250 கோடி ஒதுக்குவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...