‘இந்திய பொருளாதார வளர்ச்சியை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை’

“இந்திய பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சி ஒரு சிலருக்கு, பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது,” என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

இதற்கு இந்தியா ஒப்புக்கொள்ளாததால், கூடுதலாக 25 சதவீத வரி விதித்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரியை, ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் உயர்த்தினார்.

நட்புறவில் விரிசல் எனினும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு எல்லாம் இந்தியா அடிபணியாது என திட்டவட்டமாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் நலனே முக்கியம் என தெளிவுபடுத்தியுள்ளார். இதனால், இரு நாட்டின் நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சி ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களால், இதை எளிதாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானே எல்லாருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைக்கின்றனர். இதன் காரணமாகவே, இந்திய பொருட்கள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது.

‘சூப்பர்’ சக்தி இந்தியாவின் வளர்ச்சியை எந்தவொரு சர்வதேச சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா உறுதியாக, ‘சூப்பர்’ சக்தி கொண்ட நாடாக வளரும்.

உலக பொருளாதாரத்தில் கடந்த 2014ல், இந்தியா 11வது இடத்தில் இருந்தது. இப்போது முதல் நான்கு இடங்களுக்குள் வந்துவிட்டது. நம் பொருளாதார வளர்ச்சி, 6.3 சதவீதமாக இருக்கிறது.

பிரதமராக மோடி பதவியேற்றபோது, நாட்டின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி வெறும் 600 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 24,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...