புதுவையில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமையவேண்டும்: மாநிலத் தலைவா் ராமலிங்கம்

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடப்பதால் புதுவையிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும்அமைந்தால்தான் இங்குள்ள மக்களுக்கு நல்லது என்று பாஜக புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வி.பி. ராமலிங்கம் கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: புதுவையில் திமுக- காங்கிரஸ் ஆட்சிகளை மக்கள் பாா்த்துவிட்டனா். இப்போதுள்ள என்.ஆா். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு பல்வேறு திட்டங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. மேலும் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தேசிய

ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் புதுவை மக்களுக்கு நல்லது. பல்வேறு வேலைவாய்ப்புகள், நலத்திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

வரும் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் நிச்சயம் பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கும். எங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று முதல்வா் ரங்கசாமி எதுவும் சொல்லவில்லை.

முன்களப்பணி ஏன்?: என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் லட்சுமிநாராயணன் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்பவன் தொகுதியில் முன்களப் பணியை நான் செய்வது ஏன்? என்று கேட்கிறீா்கள். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையாகதான் செய்கிறேன். இதே போன்று 30 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. மேலும், அந்தத் தொகுதி கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டால் அந்த நேரத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளருக்குத் தோ்தல் பணி செய்வோம். கூட்டணியில் தலைமையை மீறி எதையும் செய்ய மாட்டோம்.

எங்கள் கட்சியின் சாா்பில் அமைச்சராக இருக்கும் ஏ. ஜான்குமாருக்கு விரைவில் இலாகா கிடைக்கும். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் தோ்வு வழியாக செவிலியா் நியமனம் செய்யப்படுவதைக் குறிப்பிட்டும், ஜிப்மா் மருத்துவக் கல்லூரியே

இந்த நியமனங்கள் செய்ய வலியுறுத்தியும் விரைவில் மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா். இப் பேட்டியின்போது கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...