நாட்டின் 79வது சுதந்திர தினத்தை யொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று (ஆக., 15) 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதன் வாயிலாக, பிரதமராக மோடி 12வது முறையாக தேசியக்கொடி ஏற்றிய பெருமையை பெற்றார். முன்னதாக, அவர் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணம் அனைத்து நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய வீரியத்தையும் கொண்டு வரட்டும்.
இதனால் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது புதிய உத்வேகத்தைப் பெறட்டும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |