இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக உருமாற்ற மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்தில், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மேஜர் தயான் சந்த்திற்கு மரியாதை செலுத்துவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு களம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இளைஞர்களின் திறனை வளர்க்கும் அடிப்படை திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவது வரை, ஒரு சிறந்த விளையாட்டு உட்கட்டமைப்புகள் உருவாகி வருவதை பார்க்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பது, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என இந்தியாவை விளையாட்டுத்துறையின் சர்வதேச மையமாக மாற்ற மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |