துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

பாராளுமன்ற மைய மண்டபத்தில் துணை ஜனாதிபதியாக நாளை பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு ஜனாதிபதி திரெளப முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்துவைக்கிறார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற் பெற்று இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக. தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.நேற்று காலையிலும் அவர் பாஜக. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து நன்றிகூறினார். இதற்கிடையே அவருக்கு வாழ்த்து செய்திகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும்விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்துவருகிறார்கள். துணை ஜனாதிபதி பதவி ஏற்பு பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. பதவி ஏற்புநேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அதற்கு ஏற்ப அழைப்பிதழ் வெளியிடப்படும்.

துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்துவைப்பார். இதைத்தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கு ஒதுக்கபட்டுள்ள அறைக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார். தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக பதவிவகித்து வருகிறார். அந்தபதவியை அவர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்புவார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...