பிரான்ஸ் – இந்தியா கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் போர் விமான இன்ஜின்

போர் விமானத்திற்கான 120 கேஎன் (Kilo Newton) திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா – பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.

அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தின் உரையின் போது, உள்நாட்டு போர் விமான இன்ஜின் மேம்பாட்டிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ‘விரைவில் போர் விமான இன்ஜின்களை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபடும்,’ என்றார்.

இந்த நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உள்ள எரிவாயு டர்பைன் ஆராய்ச்சி நிலையம் (GTRE) மற்றும் பிரான்ஸின் சப்ரான் நிறுவனத்தின் கூட்டு முயற்சியால், நடுத்தர போர் விமானத்திற்கான இன்ஜினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.

முதலில் 120 கேஎன் திறனுடன் உற்பத்தி செய்யப்படும் இன்ஜின்கள், 12 ஆண்டு காலக்கெடுவுக்குள் 140 கேஎன் திறனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஜெட் இன்ஜின்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு விதிகளின் கீழ் தயார் செய்யப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...