முப்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் முப்படை தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மாநாடு நடக்கிறது. சீர்திருத்தங்களின் ஆண்டு – எதிர்காலத்திற்கான மாற்றம் என்ற கருப்பொருளில் இன்று முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

எல்லை பாதுகாப்பு, காஷ்மீர் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக முப்படைகளின் மூத்த தளபதிகள் ஆலோசனை நடத்துகின்றனர். குறிப்பாக, ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். மேலும், முப்படை தளபதிகளுடன் கலந்துரையாடினார். இந்த மாநாட்டில் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படைகள் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், நாட்டை கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்புக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பீஹாருக்கு செல்லும் பிரதமர் மோடி, ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...