GST 2.0 : “கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே” – நயினார் நாகேந்திரன் பெருமிதம்

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.

இதில் 90 சதவீத பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 லிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி இருந்த பொருள்களுக்கு 0% என வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்பி, சிமெண்ட்ற்கு 28% வரி இருந்ததைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் விலை ரூ.50 முதல் 60 வரை குறைகிறது.

பொருட்களின் விலை குறைக்கவில்லை என நுகர்வோர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டிருந்த டூத் பேஸ்ட், டூத் பவுடர், ஹேர் ஆயில் மற்றும் சோப் ஆகியவற்றிற்கு 5% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலுக்கு வரி கிடையாது. ஏசி, இன்சுரன்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரிக்குறைப்பினால் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவார்கள். அதன் மூலம் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...