உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்., 29ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கண்காட்சியில் 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. இதனை 1.25 லட்சம் வர்த்தகர்களும், 4.50 லட்சம் பொதுமக்களும் பார்வையிட உள்ளனர்.
இந்த கண்காட்சியானது, வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான ஒரு மேடையாக மட்டுமல்லாமல், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.
இந்தக் கண்காட்சியில் ரஷ்யா நெருங்கிய உறவு நாடாக பங்கேற்கிறது. நாளை (செப்.,26) இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடல் நடைபெற இருக்கிறது. இந்த உரையாடல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கூட்டு வணிகங்கள், கூட்டு முயற்சிகள் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில், இந்தக் கண்காட்சி பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, கண்காட்சியில் தயாரிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முன்னதாக, பிரதமருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசை வழங்கினார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |