தியாகம், சேவை, ஒழுக்க உணர்வுகளே ஆர்.எஸ்.எஸ்.,சின் உண்மையான பலம் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்

”தியாகம், தன்னலமற்ற சேவை மற்றும் ஒழுக்கத்தை கற்பிக்கும் உணர்வே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உண்மையான பலம். அந்த அமைப்பின் நிர்வாகிகளின் ஒவ்வொரு செயலிலும், ‘தேசமே முதலில்’ என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமராக பதவியேற்ற 2014 முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், ‘மன் கீ பாத்’ எனப்படும், ‘மனதின் குரல்’ என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

முன்னுரிமை அந்த வகையில் நேற்று, மனதின் குரல் நிகழ்ச்சியின், 126வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த விஜயதசமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழாவை குறிக்கிறது. இந்த நுாற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கமளிக்கிறது.

தியாகம், தன்னலமற்ற சேவை, ஒழுக்கத்தின் போதனைகளே ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உண்மையான பலம். அந்த அமைப்பு நுாற்றாண்டுகளாக நம் நாட்டுக்கு சேவை செய்து வருகிறது.

நாட்டில் எங்காவது இயற்கை பேரிடர் ஏற்பட்டால், முதல் ஆளாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகள் தான் அங்கு செல்வர். ‘தேசமே முதலில்’ என்ற உணர்வு, அவர்களின் செயல்களில் எப்போதும் மேலோங்கி இருக்கிறது.

இந்த பண்டிகை காலத்தில், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே நாட்டு மக்கள் வாங்க வேண்டும். ‘சுதேசி’ பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்குவது, ஒரு குடும்பத்திற்கு நம்பிக்கையைத் தரும்; கைவினை கலைஞரின் கடின உழைப்பை மதிக்கும்.

வரும் 2ம் தேதி மஹாத்மா காந்தி பிறந்த நாளன்று, காதி நிறுவனத்தின் ஒரு பொருளையாவது வாங்க வேண்டும். காதியை போலவே, நம் கைத்தறி மற்றும் கைவினைத் துறையும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டு விட்டு, ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர். மேலும், 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங் கியுள்ளனர்.

நடவடிக்கை மேற்கு வங்கத்தில் வெகு விமரிசையாக கொண் டாடப்படும் துர்கா பூஜை பண்டிகை, ‘யுனெஸ்கோ’வின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது போல, ‘சாத்’ விழாவையும் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உல கின் மிகவும் தொலைதுாரமான மற்றும் அணுக முடியாத இடமாகக் கருதப்படும், ‘பாயின்ட் நீமோ’வை வெற்றிகரமாகக் கடந்து சென்றதற்காக, நம் கடற்படை அதிகாரிகளான லெப்டினன்ட் கமாண்டர் தில்னா, லெப்டினன்ட் கமாண்டர் ரூபா ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...