விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும்

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசி (பூர்வீக) பொருள்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிரம் மாநிலம் அஹில்யா நகர் மாவட்டத்தில் பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் மற்றும் பத்மபூஷன் டாக்டர் பாலாசாகேப் விக்கே பாட்டீல் ஆகியோரின் சிலைகளை ஞாயிற்றுக்கிழமை அமித்ஷா திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:

உலகில் உள்ள அனைவரும் தங்கள் பொருள்களைத்தயாரிக்க இந்தியா வந்தாக வேண்டும். ஏனெனில் 140 கோடி நுகா்வோரை கொண்டசந்தையாக இந்தியா உள்ளது. எனவே, நாட்டுமக்கள் அனைவரும் எந்தவொரு வெளிநாட்டுப் பொருளும் நமது வீடுகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கமால் இந்திய பொருள்களை மட்டுமே பயன் படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும். ஏற்கனவே உலகின் மூன்றாவது பெரியபொருளாதார நாடு என்ற நிலைக்கு நாடுமுன்னேறி வருவதாகவும், உலகளவில் முதன்மையான இடத்தை அடைவதற்கு சுதேசி பொருள்களைப் பயன்படுத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்பு தேவை என்றார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த விவசாயிகள் சுதேசிபொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை விவசாயிகள் பின்பற்றவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராவில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு சரியானநேரத்தில் உதவிவழங்கும் என்றும் உறுதியளித்த அமித் ஷா, மாநிலத்தின் மழைபாதிப்பு குறித்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர்கள் ஏக்நாத்ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோர் தன்னை சந்தித்து விளக்கியதாகவும், சேதங்கள் மற்றும் இழப்புகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாநிலஅரசிடம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்லதாக அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...