புதிய விமான நிலையம் துபாய்க்கு டாப் கொடுக்க போகும் மும்பை

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிப்பிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக்கு இரண்டாவது விமானநிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மும்பைஅருகில் உள்ள நவிமும்பை பன்வெல் பகுதியில் கடலோரம் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ளது. இந் விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு மலைக்குன்று உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது.

அதில் கிடைத்தபாறை மற்றும் மண் போன்றவை கடல் சதுப்பு நிலப்பகுதியில் போட்டு நிலம் கையகப்படுத்த பயன்படுத்தப்பட்டது. அதோடு அந்தவழியாக ஓடிய ஒரு ஆற்றை வழிமறித்து வேறுவழியாக திருப்பி இருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த 10 கிராமங்களை சேர்ந்த 3,500 குடும்பங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மலைகுன்றை உடைத்து, ஆற்றை திசைதிருப்பி.! – ரூ.19,000 கோடியில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம் அவர்களுக்கு மாற்றுஇடத்தில் அரசுவீடு கட்டிக்கொடுத்து குடியமர்த்தி இருக்கிறது. பொது மக்களின் போராட்டம் காரணமாக விமானநிலையம் கட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுவந்தது.

தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று நவிமும்பை விமான நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்தவிமான நிலையம் நாட்டிலேயே மிகப் பெரிய பசுமை விமான நிலையமாக ரூ.19,650 கோடி செலவில் முற்றிலும் டிஜிட்டல் மயமாக கட்டி முடிக்கப் பட்டுள்ளது. முற்றிலும் சோலார் மின்சாரவசதி செய்யப்பட்டு இருப்பதோடு கடல் மார்க்கமாகவும், சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் இந்தவிமான நிலையத்தை சென்றடையும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

டெர்மினஸ் கட்டடம் தாமரைவடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன்தூண்கள் இலைவடிவத்தில் வடிவமைக்கபட்டுள்ளது. 3,700 மீட்டர் ஓடுதளத்துடன் கட்டப்பட்டுள்ள இந்தவிமான நிலையம் வருடத்திற்கு 2 கோடி பயணிகளை கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் இரண்டு ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் போது 4 டெர்மினஸ் கட்டிடங்கள் ஒரேநேரத்தில் செயல்படும்.

தென்மும்பையில் இருந்து 37 கிலோ மீட்டர் தூரத்தில் 1160 ஹெக்டேர் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்தவிமான நிலையத்தை எதிர்காலத்தில் வருடத்திற்கு 6 கோடி பயணிகள் பயன் படுத்தும் வகையில் அமைக்க திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனமும், மாநிலஅரசுக்கு சொந்தமான சிட்கோ நிறுவனமும் இணைந்து இதனை கட்டிமுடித்து இருக்கிறது. இந்த விமான நிலைய திறப்பு விழா உட்பட மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்தார். புதிய விமான நிலையத்தில் நடந்தவிழாவில் விமான நிலையத்தை திறந்து வைத்து இதர திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசினார்.

இவ்விழாவில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே, தொழிலதிபர் கெளதம் அதானி, மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விமான நிலையத்தை திறந்து வைப்பதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பிரதமர் நரேந்திர மோடி நடந்து சென்று பார்வையிட்டார். அதோடு பிரதமரை வரவேற்கவந்திருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுடனும் கலந்துரையாடினார்.

மேலும் மும்பையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட போக்குவரத்தையும், மும்பையில் மக்கள் மெட்ரோ, பஸ், ரயில் என அனைத்திற்கும் பயன்படுத்தும் வகையில் மும்பை ஒன் என்ற போக்குவரத்து செயலியையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். புதிய விமான நிலையம் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

விமானநிலையம் இப்போது திறக்கப்பட்டாலும் பயணிகள் விமான சேவை டிசம்பர் மாதத்தில் இருந்துதான் தொடங்க இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...