பிரதமர் நரேந்திரமோடி, மும்பையில் நடந்த சிஇஓ மாநாட்டில் பேசும்போது, இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டுநாடுகளும் பொதுவான நம்பிக்கை அமைப்பை பகிர்ந்துகொள்வதால், அவை இயல்பான பங்காளிகள் என்று கூறினார். மேலும், நிலையற்ற உலகிற்கு இந்தியா – இங்கிலாந்து கூட்டுறவு நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமராக நியமிக்கப்பட்ட பிறகு தனது முதல் இந்தியப்பயணமாக வந்திருந்த கீர் ஸ்டார்மரை பிரதமர் மோடி வியாழக்கிழமை மும்பையில் சந்தித்தார். இந்தஇரண்டு தலைவர்களும் தங்கள் பேச்சுவார்த்தையின் போது, டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையிலான ஆழமடைந்துவரும் உறவுகளை எடுத்துரைத்தனர்.
“ஒப்பந்தம் கையெழுத்தான சிலமாதங்களிலேயே நீங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளதும், உங்களுடன் இதுவரை இல்லாத மிகப் பெரிய வணிகக் குழுவினர் வந்திருப்பதும், இந்தியா -பிரிட்டன் கூட்டுறவில் வந்துள்ள புதியஆற்றல் மற்றும் பரந்த பார்வையைக் குறிக்கிறது.”
“பிரதமர் ஸ்டார்மர் அவர்களின் தலைமையில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நான் பிரிட்டனுக்குச் சென்றபோது, வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தகஒப்பந்தம் தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தோம்.”
“இந்தியா மற்றும் பிரிட்டன் இயல்பான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளின்மீதான பொதுவான நம்பிக்கையே எங்கள் உறவின் அடித்தளம்.”
“உலகளாவிய நிலையற்ற இந்த கால கட்டத்தில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான இந்த வளர்ந்துவரும் கூட்டுறவு, உலகளாவிய நிலைத்தன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஒரு முக்கியமான அடித்தளமாக மாறிவருகிறது.”
“இந்தோ – பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, அத்துடன் உக்ரைனில் நடந்துவரும் மோதல் குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். உக்ரைன் மோதல் மற்றும் காசாவிவகாரத்தில், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலம் அமைதியை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவுஅளிக்கிறது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக் கூட்டுறவை மேம்படுத்த நாங்கள் முழுமையாக உறுதியுடன் இருக்கிறோம்.”
“முக்கியமான கனிமங்களில் (critical minerals) ஒத்துழைப்புக்காக ஒருதொழில்துறை சங்கம் மற்றும் விநியோகச் சங்கிலி ஆய்வகத்தை நிறுவ நாங்கள் முடிவுசெய்துள்ளோம். இதன் துணை வளாகம் ஐ.எஸ்.எம் தன்பாத்தில் அமையும்.”
“பிரதமர் ஸ்டார்மருடன் இது வரை இல்லாத மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க கல்வித்துறைப் பிரதிநிதிகள் குழு வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஒன்பது பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்கப் போவது மிகவும் மகிழ்ச்சியானவிஷயம். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் குருகிராம் வளாகம் சமீபத்தில் திறக்கப் பட்டது, மேலும் முதல் மாணவர் குழுவும் சேர்க்கை பெற்றுள்ளது.”
“ராணுவப் பயிற்சியில் ஒத்துழைப்புக்கான ஒருஉடன்பாட்டை நாங்கள் எட்டியுள்ளோம். இதன்கீழ், இந்திய விமானப்படையின் பறக்கும் பயிற்றுநர்கள் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸில் பயிற்சியாளர்களாகப் பணிபுரிவார்கள்.”
“இந்தியாவின் ஆற்றல் மற்றும் பிரிட்டனின் நிபுணத்துவம் இரண்டும் சேர்ந்து ஒருதனித்துவமான ஒத்திசைவை உருவாக்குகின்றன. எங்கள் கூட்டுறவு நம்பகமானது, திறமை மற்றும் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டது.” என்று பிரதமர் மோடி கூறினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |