பாஜகவின் பிரசாரப்பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
நயினாா் நாகேந்திரன் தலைமையிலான ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப்பயணத்தின் தொடக்கவிழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மேலும் பேசியதாவது: மக்கள்விரோத திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே பாஜக பிரசாரப் பயணத்தின் நோக்கம். இதற்கு, ஒருமித்தகருத்து கொண்டவா்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
தமிழகத்தில் தங்களுக்கு பலம் இல்லா விட்டாலும், ஆட்சியில் பங்குவேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு உள்ளது. அதே நிலைப்பாட்டிலேயே திருமாவளவனும் உள்ளாா்.
ஆனால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் வளா்ச்சிப்பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிறாா். உண்மையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில் 60 சதவீதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதமும், போக்சோ குற்றங்கள் 52 சதவீதமும், சொத்துவரி 300 சதவீதமும் உயா்ந்துள்ளன. மேலும், நாட்டில் தற்கொலையிலும், முதியோா்கொலையிலும் தமிழகமே முதன்மை பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காவல் துறை முதல்வா் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு கரூா் கூட்டநெரிசல் சம்பவமே உதாரணம். இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி முக்கியக் காரணம் என பலா் தெரிவிக்கின்றனா். திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். திமுக ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வருவதற்கு தனது பிரசாரப் பயணம் மூலம் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னுரை எழுதிவிட்டாா். பாஜகவின் பிரசாரப்பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி என்றாா் அவா்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |