மக்களவை காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு பயப்படுவதாக சமீபத்தில் பதிவுஒன்றை போட்டார். இந்த பதிவை பகிர்ந்துள்ள அமெரிக்க நடிகையும், பாடகியுமான மேரிமில்பென், ராகுல் சொல்வதுதவறு எனக் கூறியுள்ளதோடு, ராகுலை விமர்சித்து ஒருபதிவையும் போட்டுள்ளார். அந்தபதிவு குறித்து தற்போது பார்க்கலாம்.
பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் பதிவைபகிர்ந்து ஒருபதிவை போட்டுள்ள மேரி மில்பென், ராகுல்காந்தி, நீங்கள் சொல்வது தவறு என பதிவிட்டுள்ளார். அந்தபதிவில், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு பயப்பட வில்லை என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நீண்டவிளையாட்டை புரிந்துகொள்கிறார், மேலும், அமெரிக்கா உடனான அவரது ராஜதந்திரம் மூலோபாயமானது என்றும் மேரி கூறியுள்ளார். அதேபோல், அமெரிக்கதிபர் ட்ரம்ப் அமெரிக்காவின் நலன்களை எப்போதும் முதன்மையாக கருதுவது போல், பிரதமர் மோடியும் இந்தியாவிற்கு சிறந்ததையே செய்வார் என்றும் அதைதான் பாராட்டுவதாகவும் மேரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொருநாட்டு தலைவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் என்றும், அவர்கள் தங்கள்நாட்டிற்கு சிறந்ததை சொல்லவும், செய்யவும் செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அந்த பதிவின் இறுதியில், “இதுபோன்ற ஒருதலைமைத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால், இந்தியாவின் பிரதமர் ஆகும் அளவிற்கு உங்களிடம் புத்திசாலித்தனம் இல்லை“ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், நீங்கள் உங்கள் “நான் இந்தியாவை வெறுக்கிறேன்“ சுற்றுப்பயணத்திற்கு திரும்புவது நல்லது, அங்கு ஒருபார்வையாளர் மட்டுமே இருக்கிறார், அது நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |