விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது

பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வுகூட்டத்தில், காப்பீடு நிறுவனங்கள் சிலரது பயிர் பாதிப்புக்கு ஒருரூபாய் முதல் 21 ரூபாய் வரை மட்டும் இழப்பீடு வழங்கியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது விவசாயிகளை கிண்டல்செய்யும் செயல் என அதிருப்தி தெரிவித்த அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஒரே ஒருரூபாயை கொடுத்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

குறைந்த செலவில் விவசாய பயிர்களுக்கு காப்பீடுவசதி அளிப்பதற்காக 2016ம் ஆண்டின் காரிப் பருவத்தின்போது பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. விதைப்புக்கு முன்பு தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம் வரை இயற்கை சீற்றங்களால் பயிர்சேதம் ஏற்பட்டால், இத்திட்டத்தில் இழப்பீடு பெறலாம்.

இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து அமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகாராஷ்டிர விவசாயிகளிடம் ஆன்லைன் வழியாக அவர் கலந்துரை யாடினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: காப்பீட்டு நிறுவனங்கள் ஒருரூபாய், மூன்று ரூபாய், 21 ரூபாய் என்று பயிர் சேதத்துக்கு இழப்பீடு வழங்கியிருப்பதாக விவசாயிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர்.

இது, விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறுசெய்த காப்பீடு நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...