பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம்

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது (BJP–JD(U) Alliance’s Victory in the Bihar Assembly Election). பாஜக கூட்டணியின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு நிதிஷ்குமார் அரசின் மகளிர்நலன் சார்ந்த திட்டங்கள், குழப்பமே இல்லாத பாஜக கூட்டணி, மோடி அலை, பாஜகவின் பூத் லெவல் தேர்தல் வியூகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்கள் என பல்வேறு காரணங்கள் முன்வைக்கபடுகின்றன.

1. நிதிஷ்குமாரின் ஆளுமை

பீகார் அரசியலில் நிதிஷ்குமார் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக திகழ்கிறார்.
நிதிஷ்குமார் ஒரு புத்திசாலித் தனமான, மூத்த அரசியல் தலைவர் என்கிற பிம்பம் பெரும்தாக்கத்தை உருவாக்கி உள்ளது
பீகார் அரசியலிலும் ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கான நீண்டகால அனுபவம் மிகப்பெரிய பலமாக உள்ளது. பலஆண்டுகளாக முதல்வராகப் பதவிவகித்த அவரது அனுபவம், நிர்வாகத் திறமை, மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் மக்கள் மனதில் ஆகப்பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது என்பது மிகையல்ல

2. மோடி அலை

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மோடி அலை ஒரு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிரதேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு பீகார் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை.
லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) ஆட்சிக்கு வந்தால் பீகாரில் “ஜங்கிள் ராஜ்” எனப்படுகிற காட்டுதர்பார் ஆட்சி திரும்பும் என்று மோடி திரும்ப திரும்ப பிரசாரம் செய்ததும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். கடந்தகால ஆர்ஜேடி ஆட்சியை ஒப்பிடுகையில் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

தேர்தலுக்கு பின்னர்தான் முதல்வர் தேர்ந்தெடுக்கபடுவார் என அமித்ஷா கூறியிருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார்தான் என பகிரங்கமாக மோடி செய்த பிரசாரமும் ஒரு காரணம்.

3. பெண் வாக்காளர்கள்

பாஜக கூட்டணி வெற்றிக்கு பெண் வாக்காளர்களின் வாக்கும் மிகமுக்கிய காரணம் .பாலிகா சைக்கிள் யோஜனா என்ற பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும்திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கியது, ஜீவிகா’ சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியது, வீடு தோறும் பெண்களுக்கு ரூ10,000 கடன் வழங்கிய முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா உள்ளிட்ட பெண்களை மையப் படுத்திய திட்டங்கள், பெண் வாக்காளர்களை பாஜக கூட்டணி பக்கம் அப்படியே சாயவைத்துள்ளது. குறிப்பாக தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ10,000 கடன் உதவிதிட்டம், பெண்களின் ஓட்டுகளை பாஜக கூட்டணி அள்ளிச் செல்ல காரணமாக இருந்தது.

2016-ல் அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு, பெண்களின் குரலுக்கு செவிசாய்க்கும் ஒரு தலைவராக நிதிஷ்குமாரை கொண்டாட வைத்தது.

4. அமித்ஷா வியூகம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தேர்தல் வியூகமும் பாஜக கூட்டணியின் வெற்றிக்குகாரணம். பொதுவாக, மாநிலம் தழுவிய தேர்தல் வியூகம் என்பதற்கும் அப்பால் ஒவ்வொரு தொகுதிக்குமான தனித்தனி தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்திய அமித்ஷாவின் வியூகம் ‘அடேங்கப்பா’ வெற்றிக்கு காரணம் என்கின்றனர் பாஜகவினர்.

5. சொந்த பலத்தில் பாஜக

பாஜக தேசியக் கட்சியாக, மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் பீகாரில் தனித்து ஆட்சிஅமைக்கக் கூடிய வலிமை கொண்ட கட்சி அல்ல. பீகாரில் கூட்டணி கட்சிகளை குறிப்பாக ஜேடியூவை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடிய நிலையில்தான் உள்ளது பாஜக. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் பீகாரில் பாஜகவை தனிப் பெரும்பான்மை பெறக் கூடிய வலிமை உள்ள கட்சியாக மாற்றுகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக பீகார் மாநில பாஜகவின் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வலிமைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்துக்குமான புதிய தலைவர்கள் அடையாளபடுத்தப்பட்டு முன்னிறுத்தபட்டனர். இத்தகைய வியூகம், பல்வேறு ஜாதி வாக்காளர்களிடம் பாஜகவை கொண்டு சேர்க்க உதவியது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBCs), யாதவர் அல்லா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (non-Yadav OBCs), மற்றும் தலித்து களிடையேயும் பாஜக ஆழ ‘ஊடுருவி விட்டது’ என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் பட்டவர்த்தமான உண்மை.

6. அரசு திட்டங்கள்- வாக்குறுதிகள்

மத்திய, மாநில அரசுகளின் அனைவருக்கும் வீடு, சுகாதாரத் திட்டங்கள், விவசாயிகளுக்கான மோடிபணம், மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்றவை மக்களிடம் நம்பிக்கை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்தது. இலவசமின்சாரம் மற்றும் பெண்களுக்கு ரூ2. 2ல் லட்சம் முதல் ரூ10 லட்சம்வரை கடன் வழங்குவோம் என்ற வாக்குறுதிகள் பீகாரின் குக்கிராமங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

7. பாஜக பூத் கமிட்டி

பாஜகவின் பூத் கமிட்டியின் செயல்பாடுகளையும் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கான அடித்தளமாக சொல்லலாம். பாஜக பலவீனமாக இருக்கும் பூத்துகளை கண்டறிவது, அங்கே பலம்இல்லாமல் இருப்பதற்கான காரணங்களை ஆராய்வது, அதை சரிசெய்வது என பூத் லெவல் வியூகம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அத்துடன் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு தவறாமல் அழைத்து வந்து ஓட்டுப்போட வைத்ததிலும் பாஜகவின் பூத் முகவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல SIR நடவடிக்கையின் போது, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வது, விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பது, மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது ஆகியவற்றில் பாஜக கூட்டணியினர் பம்பரமாக சுழன்றனர். ஆனால் காங்கிரஸ்- ஆர்ஜேடியினர் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு கோட்டை விட்டனர்.
பூத் லெவலில் மக்களுடன் இணைந்து நின்றவர்களாக பாஜகவின் பூத் ஏஜெண்டுகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்; இது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்