பாதுகாப்பில் சமரசம் இல்லை

நாட்டில் அமைதிநிலவுவது மிகவும் முக்கியம் என்றும் ஆனால், பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரே இதற்குசாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ குரு தேஜ்பகதூரின் 350வது தியாக நாளையொட்டி ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது,

ராமாயணத்தின் நகரமான அயோத்தியாவுக்கு இன்று காலை சென்றிருந்தேன். தற்போது கீதையின் நகரமான குருக்ஷேத்ராவுக்கு வருகைபுரிந்துள்ளேன். ஸ்ரீ குரு தேஜ் பகதூரின் 350 வது தியாக நாளில் நாம்அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து துறவிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

குரு தேஜ்பகதூரை போன்றவர்கள் வரலாற்றில் மிகவும் அரிதானவர்கள். அவரின் வாழ்க்கை, அவரின் தியாகம், பண்பு, போன்றவை பலருக்கும் முன்னுதாரணமானவை. முகலாயர்களின் படையெடுப்பில் காஷ்மீர் ஹிந்துக்கள் கட்டாயமதமாற்றம் செய்யப்பட்டனர்.

ஸ்ரீ குரு தேஜ் பகதூர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் என முகலாய மன்னர் ஒளரங்கசீப்பிடம் சென்று கூறுங்கள் என்று ஸ்ரீ குருசாஹிப் தெரிவித்திருந்தார்.

உண்மையையும் நீதியையும் காப்பதே சிறந்தமதம் என இந்த குருக்‌ஷேத்ர மண்ணில் நின்றுக்கொண்டு கிருஷ்ணர் அறிவித்தார். ஸ்ரீ குரு தேஜ் பகதூரும் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையை காப்பதே உண்மையான மதமாகக் கருதினார்.

நமதுகுருக்களின் பாரம்பரியம் நாட்டின் தன்மை, கலாசாரம், மற்றும் தைரியம் போன்றவற்றின் அடித்தளமாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...